அர்ஜுன் சம்பத்தின் மகனை கைது செய்து தண்டனை கைதி போல நடத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன். கோபிசெட்டிபாளையத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் பேட்டி.

இந்துமுன்னணி சார்பில் வேல்வழிபாட்டினையொட்டி ஏழு திருத்தலங்களுக்கு மங்கல வேலானது எடுத்துச் செல்லப்படுகிறது..அர்ஜுன் சம்பத்தின் மகனை கைது செய்து தண்டனை கைதி போல நடத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன்
.அதனையொட்டி கோபிசெட்டிபாளையம் பச்சைமலை கோவிலில் இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வேலுடன் வழிபாடு செய்ததார்.அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்.சென்னிமலையில் உள்ள கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் சென்னிமலையை கிறிஸ்தவ மலையாக, மாற்றுவோம் என்று தெரிவித்தார்கள் .
அதை தட்டி கேட்பதற்கு அங்கே ஆளில்லை எந்தவித அரசியல் கட்சியும் முன் வரவில்லை எனவும்இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தண்டனை கைதியைப் போல அடையாள கைதியை போல சிலைடு எழுதி தொங்கவிடப்பட்டுள்ளது அதை வன்மையாக கண்டிக்கிறேன் என்றார்.