கோபி அருகே உள்ள நம்பியூர் கொட்டக்காட்டு பாளையம் என்ற இடத்தில் கன மழைக்கு தற்காலிக பாலம், கட்டுமான பொருட்கள் மழை நீரில் அடித்து செல்லப்பட்டது

At Nambiur Kottakkattu Palayam near Gobi, a temporary bridge and construction materials were washed away by heavy rains.

கோபி அருகே உள்ள நம்பியூர் கொட்டக்காட்டு பாளையம் என்ற இடத்தில் கன மழைக்கு தற்காலிக பாலம், கட்டுமான பொருட்கள் மழை நீரில் அடித்து செல்லப்பட்டது.
.

InShot 20241020 152418314
InShot 20241020 152448891

நம்பியூர் – புளியம்பட்டி சாலையில் போக்குவரத்து துண்டிப்பு.கோபி அருகே உள்ள நம்பியூர் – புளியம்பட்டி சாலையில் கொட்டக்காட்டு பாளையம் என்ற இடத்தில் தரை மட்ட பாலத்தை அகற்றி விட்டு உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் புளியம்பட்டி அருகே உள்ள மங்கரசு வளையபாளையம், செம்மம் பாளையம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் திடீரென கன மழை பெய்தது.சுமார் 3 மணி நேரம் கொட்டி தீர்த்த கன மழையால் மழை நீர் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழை நீர் ஓடையில் இருந்து அதிகளவு தண்ணீர் கொட்டக்காட்டு பாளையம் பகுதியில் பாலம் கட்டுமான பணிகள் நடைபெறும் பகுதியில் உள்ள ஓடை வழியாக வெளியேறும் போது, அங்கு அமைக்கப்பட்ட பாலம் கட்டுமான பணிகளை முழுமையாக சேதப்படுத்தியதோடு கட்டுமான பொருட்களும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.இதனால் நம்பியூரில் இருந்து புளியம்பட்டி செல்லும் சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்