முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 6வது நினைவு தினத்தை முன்னிட்டு கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டியில் கலைஞர் உருவ சிலைக்கு ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 6வது நினைவு தினத்தை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அவரது உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட கள்ளிப்பட்டியில் உள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி ஈரோடு வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் பெருமாள்சாமி தலைமையில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், மாநில திமுக நெசவாளர் அணி துணைச்செயலாளர் மணிமாறன், மாநில அணி விவசாய அணி இணைச்செயலாளர் எல்.பி.தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கலைஞரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சிறுவலூர் வெள்ளியங்கிரி, கீதாமுரளி, மாதேஷ், டி.என்.பாளையம் ஒன்றிய திமுக செயலாளர் எம்.சிவபாலன், கோபி நகர செயலாளர் என்.ஆர்.நாகராஜ், ஈரோடு வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் குள்ளம்பாளையம் கே.கே.செல்வன், கோபி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சிறுவலூர் முருகன், கோபி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் கோரக்காட்டூர் ரவீந்திரன், நம்பியூர் ஒன்றிய திமுக செயலாளர் செந்தில்குமார், ஈரோடு வடக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட நெசவாளர் அணி தலைவர் சண்முகம், மாவட்ட சுற்றுச்சூழல் அணி தலைவர் கைலாஷ்குமார், மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் டாக்டர். திருநாவுக்கரசு, திராவிடர் கழக கோபி மாவட்ட தலைவர் மு.சென்னியப்பன், மாவட்ட செயலாளர் குணசேகரன், சத்தி நகர செயலாளர் ஜானகி ராமசாமி, பவானி நகர செயலாளர் ப.சி.நாகராஜ், சத்தி நகர செயலாளர் இளங்கோ,லக்கம்பட்டி பேரூர் கழக செயலாளர் வேலவன், பெரிய கொடிவேரி பேரூராட்சி தலைவர் தமிழ்மகன் சிவா, காசிபாளையம் வெற்றிவேல், வாணிப்புத்தூர் பேரூராட்சி தலைவர் சிவராஜ், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் அன்பழகன், மாவட்ட பிரதிநிதி வெள்ளாளபாளையம் சீனிவாசன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் நஞ்சைகோபி கணேசன், அபிராமி வெங்கிடு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் வினோத், பிரகாஷ், வைத்தீஸ்வரன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் கணபதிபாளையம் கார்த்திகேயன், கூகலூர் பேரூர் கழக செயலாளர் ராஜாராம், வாணிப்புத்தூர் பேரூர் கழக செயலாளர் சேகர், வாணிப்புத்தூர் பேரூராட்சி துணைத்தலைவர் கருப்புசாமி, கூகலூர் கவுன்சிலர் அழகிரி, பவானி நகர துணைச்செயலாளர் எஸ்.பி.முருகேசன், தலைமை கழக பேச்சாளர் பவானி கண்ணன், பவானி நகராட்சி தலைவர் சிந்தூரி இளங்கோவன், இந்திரா மெடிக்கல் துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 6வது நினைவு தினத்தை முன்னிட்டு கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டியில் கலைஞர் உருவ சிலைக்கு ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam