காசிபாளையத்தில் தமிழக வெற்றி கழக கொடியேற்று விழா
காசிபாளையம் பேரூராட்சி தமிழக வெற்றி கழகம் சார்பில் காசிபாளையத்தில் கட்சி கொடியேற்றம் விழா நடந்தது.


.விழாவில் கோபி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த எம்.ஆனந்தகுமார்35 அடி உயர கட்சிக் கொடியினை ஏற்றி வைத்தார்.பின்னர் கட்சி நிர்வாகிகளுக்கு உறுப்பினர் கார்டு வழங்கும் முகாமை தொடங்கி வைத்தார்.

மேலும் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் காசிபாளையம் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் சரவணன், சத்தியா ஆகியோர் செய்தனர்.