கோபிசெட்டிபாளையம் நகராட்சியுடன் ஐந்துக்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளை இணைக்கும் முடிவை அரசு பரிசீலனை செய்ய வேண்டுமென முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நாதிபாளையம் , வெள்ளாங்கோயில் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் 84 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற உள்ள பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் கோபி சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.


அதனை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில்கோபிசெட்டிபாளையம் மற்றும் சத்தியமங்கலம் நகராட்சிக்கு அருகாமையில் உள்ள கிராம ஊராட்சிகளை இணைப்பதற்கான முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது.
இதில் கோபி நகராட்சி எல்லைக்கு அருகே உள்ள குள்ளம்பாளையம், நாதிபாளையம் மற்றும் மொடச்சூர் ஆகிய ஊராட்சி பகுதிகளில்எந்த ஒரு தொழில் சாலையோ சிறு நிறுவனங்களோ இல்லாத நிலையில்அதிக அளவில் விவசாயிகளும் கூலி தொழிலாளர்களும் வசித்து வரும் பின்தங்கிய கிராமங்கள் உள்ள இந்த ஊராட்சி பகுதிகளை நகராட்சியுடன் இணைத்தால் அங்குள்ள வீடு மற்றும் விவசாய நிலங்களுக்கான வரி விதிப்பு அதிமாகும் எனவே இந்த ஊராட்சிகளை நகராட்சி பகுதிகளுடன் இணைக்க கூடாதென கிராம சபை கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளதுஅதனடிப்படையில் கோபி அருகே உள்ள ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை பரிசீலனை செய்யவேண்டுமென முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.
இதில் கோபி யூனியன் சேர்மன் மெதீஸ்வரன், கோபி நகர செயலாளர் கணேஷ், குறிஞ்சிநாதன், சிபி.கார்த்திக் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.