கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூரில் இருந்து ஒப்பந்த பணிக்காக லாரியில் கலவை ஏற்றுக் கொண்டு கோபி நோக்கி வந்து கொண்டிருந்தது, கலவை ஏற்றி வந்த லாரி குருமந்தூர் ரவுண்டானா அருகே வந்து கொண்டிருந்தபோது நிலை தடுமாறி சாலையில் இருந்த மையத் தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது


இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்த நிலையில் லாரியில் சிக்கிக் கொண்டிருந்த கள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் சின்னசாமியை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த லாரி விபத்தின் போது முன்பின் வாகனங்கள் ஏதும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது



கலவை லாரி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது, மேலும் விபத்துக்குள்ளான லாரியை மீட்க்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்