

கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களுக்கு தெரு நாய்களால் அச்சுறுத்தல் ஏற்படுவதாக தொடர்ந்து கோபி சட்டமன்ற உறுப்பினருக்கு புகார்கள் வந்தது இதனை தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் கால்நடை மருத்துவமனை அருகில் உள்ள நாய்கள் கருத்தடை
மையம் துவங்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கு தேவையான உபகரணங்களை கடந்த சில தினங்களுக்கு முன்பு கோபி சட்ட மன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே ஏ செங்கோட்டையன் வழங்கினார்,


நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டதை தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து தனி தனி அறைகளில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது,இன்று முதல் தெரு நாய்களுக்கு கருத்தடைமையத்தில் அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது, இந்த கருத்தடை மையத்தில் இன்று கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே எஸ் செங்கோட்டையன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
