நம்பியூர் அருகே உள்ள குருமந்தூர் மேடு பாரதியார் வீதியைச் சேர்ந்த சக்திவேல் மகன் பிரதீப் குமார் 28; கடத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ் கான்ஸ்டபில் ஆக வேலை செய்கிறார். இவரது மனைவி காயத்ரி 26; இவர் நம்பியூர் போலீஸ் ஸ்டேஷனில் பெண் கான்ஸ்டபிள் ஆக வேலை செய்கிறார்.
இந்நிலையில் இவர்கள் குடியிருக்கும் வீடு நத்தம் புறம்போக்கு வீட்டு வகையை சார்ந்தது. இதனால் தனது வீட்டு அருகில் குடியிருக்கும் பழனிச்சாமி விவசாயம் செய்து வருகிறார். (திமுக பிரமுகர் )என்பவருக்கும் நில அளவீடு செய்வதில் பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் பிரதீப் குமார் தனது வீட்டுக்கு பட்டா வழங்கும் படி குருமந்தூர் வி.ஏ.ஓ ; பழனிச்சாமியடம் மனு கொடுத்திருந்தார்.
அதன் அடிப்படையில் விஏஓ பழனிச்சாமி இது சம்பந்தமாக பிரதீப் குமார் வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது தனது வீட்டு அருகில் வசிக்கும் பழனிச்சாமி, அவரது மனைவி புனிதா ஆகியோர் பிரதீப் குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குவாதம் முற்றி விடவே பழனிச்சாமி, காயத்ரியை கீழே தள்ளிவிட்டு கீழே கிடந்த கல்லை எடுத்து காயத்ரியை தாக்கியுள்ளார். இதை தடுக்கச் சென்ற பிரதீப் குமாரை அருகில் கடந்த மண்வெட்டி புடியை எடுத்து பழனிச்சாமி தாக்கியுள்ளார், அருகில் இருந்த பிரதீப் குமாரின் உறவினரையும் தாக்கியுள்ளனர். மீண்டும் எங்களை பகைத்துக் கொண்டால் கொன்று விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். காயமடைந்த காயத்ரி, பிரதீப் குமார் பிரவீன் ஆகியோர் கோபி அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இதேபோல் பழனிச்சாமியும் பிரதீப் குமார் மற்றும் காயத்ரி ஆகியோர் தாக்கியதாகவும், தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் நம்பியூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.இது குறித்தும் நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.