நம்பியூர் ஒன்றிய அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டதுஇதில் நம்பியூர் பஸ் நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு நம்பியூர் ஒன்றிய அதிமுக செயலாளர் தம்பி சுப்பிரமணியம், ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர் அதனை தொடர்ந்து நம்பியூர் அருகே உள்ள பிலியம்பாளையம் பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.கூட்டத்தில் நம்பியூர் – எலத்தூர் பேரூராட்சி செயலாளர்கள் கருப்பணன், சேரன் சரவணன், பொலவபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்ட மூர்த்தி, சந்திரசேகர், சோமசுந்தரம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.