கோபி நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி சீருடை


கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் தீபாவளிக்கு வழங்கப்படும் சீருடைகள் இன்று நகராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டது பெண் தூய்மை பணியாளர்களுக்கு பாலிஸ்டர் புடவை இரண்டு எண்ணிக்கையும் ஆண் தூய்மை பணியாளர்களுக்கு பாலிஸ்டர் காக்கி சீருடைகள் இரண்டு செட்டும் நகர் மன்ற தலைவர் திரு என் ஆர் நாகராஜ் அவர்களும் நகராட்சி ஆணையாளர் திருமதி டி.வி.சுபாஷினி அவர்களும் வழங்கினார்கள் இந்நிகழ்வில் நகராட்சி துப்புரவு அலுவலர் சோழராஜ் துப்புரவு ஆய்வாளர்கள் திரு நிருபன் சக்கரவர்த்தி சௌந்தரராஜன் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் சக்திவேல் பழனிச்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.