ஈரோடு மாவட்டத்தில் முதன்முறையாக எலத்தூர் குளத்தில் நெடுந்தூரம் வலசை வரும் பறவையான கருவால் மூக்கன், புகைப்படத்துடன் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.


வடக்கு ஐரோப்பா, ரஷ்யா, சைபீரியா போன்ற நாடுகளில் இருந்து மத்திய ஆசிய பறவைகள் வழித்தடத்தில் இவை தமிழகத்திற்கு வருகின்றன. இவை உலகிலேயே இடைநிலாமல் நெடுந்தூரம் (13000 கிமீ) பறக்கும் மூக்கன் குடும்பத்தைச் சார்ந்த பறவை ஆகும்.பூச்சிகள், மெல்லுடலிகள் போன்றவற்றை உண்டு வாழும் இப்பறவைகள் எலத்தூர் குளத்தில் உள்ள மண்மேடுகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் பட்டியலில் அச்சுறு நிலையை நெருங்கிய இனமாக பட்டியலிடபபட்டுள்ள கருவால் மூக்கன் பறவையை எலத்தூர் குளத்தில் நேற்று மதியம் பறவையாளர்கள் மகேஸ்வரன் தெய்வசிகாமணி, சுந்தர மாணிக்கம் ஆகியோர் பதிவு செய்தனர்.