நம்பியூர் ஒன்றிய அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்


நம்பியூர் ஒன்றிய அதிமுக சார்பில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் சொத்து வரி உயர்வை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.


போராட்டதிற்கு நம்பியூர் ஒன்றிய அதிமுக செயலாளர் தம்பி சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
நம்பியூர் ஒன்றிய தெற்கு அதிமுக செயலாளர் ஈஸ்வரமூர்த்தி,நம்பியூர் மற்றும் எலத்தூர் பேரூராட்சி அதிமுக செயலாளர்கள் கருப்பணன் சேரன் சரவணன், ஐ டி வி விங் ஒன்றிய செயலாளர் M.திவாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் பதாகைகளை ஏந்தி ரத்து செய் ரத்து செய் சொத்து வரி உயர்வு ரத்து செய், மின்கட்டண உயர்வை ரத்து செய், குறைத்திடு குறைத்திடு குடிநீர் வரியை குறைத்திடு உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் அதிமுக கட்சி நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மணிகண்டமூர்த்தி, சிவகுமார், எஸ்.பி. பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.