கோபிசெட்டிபாளையத்தில் உள்ள 3 மாடிகள் கொண்ட நகராட்சி வணிக வளாகத்தை இடித்து புதிதாக கட்டுவதற்க்கு, தற்போது அரசு ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு மாடி மட்டுமே கட்ட முடியும், நகராட்சி நிர்வாகம் சார்பில் அரசுக்கும் சரியான தகவல்களை அளிக்கவில்லை – கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குற்றசாட்டு,


கோபிசெட்டிபாளையம் பேருந்துநிலையத்திற்கு அருகில் உள்ள நகராட்சி வணிக வளாக கட்டிடத்தில் 3 மாடிகளில் சுமார் 70 க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன, இந்த வணிக வளாக கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய வணிக வளாகம் அமைப்பது தொடர்பாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கடைகளின் குத்தகைதாரர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது,


இதற்கு வணிக வளாகத்தில் உள்ள கடைகளின் குத்தகைதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இன்று கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினர் கே ஏ செங்கோட்டையனை சந்தித்து வணிகர்கள், கட்டிடம் இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர். இது குறித்து முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்,
அப்போது பேசிய அவர்,
கோபிசெட்டிபாளையம் பேருந்துநிலையத்திற்கு எதிர் புறம் உள்ள வணிக மையம் கட்டப்பட்டு 28 ஆண்டுகள் தான் முடிந்திருக்கிறது, 40 ஆண்டுகள் நிறைவு பெற்றதாக என்று 16.8.2024 ல் இடிப்பதற்க்கு ஆன்லைன் மூலமாக டெண்டர் விடப்பட்டிருக்கிறது,
40 ஆண்டுகள் நிறைவு பெறாமலே அரசு கவனத்திற்கு நகராட்சி நிர்வாகம் எடுத்து செல்லப்பட்டு இருக்கிறது, இதுகுறித்து வணிகர்களிடம் ஓப்புதல் பெறவில்லை,
கட்டிடம் கட்டுவதற்க்கான முழு தொகை அரசு வழங்கவில்லை, தற்போது, ஒரு கோடியே 52 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது இதில் நகராட்சியின் பங்கு 76 லட்சம் ஆகும்,
தற்போது உள்ள வணிக வளாகத்தில் மூன்று மாடிகள் உள்ளது தற்போது ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு மாடி மட்டுமே கட்ட முடியும், நகராட்சி நிர்வாகம் சார்பில் அரசுக்கும் சரியான தகவல்களை அளிக்கவில்லை,
வணிக வளாகம் கட்டிடம் 28 ஆண்டுகள் தான் ஆகின்றது, அதனை அகற்றக் கூடாது என நகராட்சி கவுன்சிலர்கள் 30 பேரில் 16 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்
இது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் வணிக வளாக கட்டிடம் அகற்றுவதை உடனடியாக நிறுத்துவதற்காக நடவடிக்கையை துறை ரீதியான அமைச்சரிடத்திற்கு கொண்டு சேர்ப்போம்..
தற்போது உள்ளது போல மூன்று மாடி கட்டிடம் கட்டுவதற்கான முழு நிதி ஒதுக்கீடு செய்த பின்னர் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் ஒப்புதல் பெற்று இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.