கோபி அருகே உள்ள மூல வாய்க்கால் முருகன் கோவில் மலை மீது ஒற்றை காட்டு யானை ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டி..என்.பாளைய வன சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஏராளமான யானைகள்,சிறுத்தை,புலி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளது.இந்த வனவிலங்குகள் அவ்வப்போது உணவிற்காகவும்,தண்ணீருக்காகவும் சாலையைக் கடந்து அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.


இந்நிலையில் நேற்று இரவு டி.என்.பாளையம் வனபகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை, கரட்டடிபாளையம் அருகே உள்ள மேலவாய்க்கால் பகுதியில் உள்ள குமரன் கரடு என்ற பகுதியில் உள்ள குமரகிரி வேலாயுசாமி கோவில் மலை மீது மலை மீது ஏறியது.


அப்போது அந்த பகுதியில் உள்ள ஈஸ்வரி என்பவரும், அவரது கணவரும் வீட்டின் முன்பு அமர்ந்து இருந்த போது, விவசாய தோட்டத்தின் வழியாக வந்த யானையை கண்டு அதிர்ச்சியில் சத்தமிட்டு உள்ளனர்.


அதைத்தொடர்ந்து யானை, உடனடியாக மலை மீது உள்ள முருகன் கோயிலுக்கு சென்றது


இது குறித்து தகவல் அறிந்ம டி.என்.பாளையம் வனத்துறையினர் மற்றும் கடத்தூர் போலீசார், தீயணைப்புத்துறையினர் உடனடியாக குமரன் கரடு சென்றனர்.


அப்போது மலை மீது இருந்த யானையை கண காணித்த போது திடீரென யானை விரட்ட தொடங்கியது. அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு சென்று யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் யானை குமரன் கரடு பகுதியில் இருப்பதை அறிந்து ஏராளமானோர் கோயில் முன்பு திரண்டதால் மலை மீது இருந்த யானை கீழே இறங்காமல் உள்ளது.
யானை மலை மீது கீழே இறங்கி வாய்க்காலில் நீராடி வாய்க்கால் அங்கேயும் இங்கேயுமே சுற்றித்திரிந்து பிறகு காட்டுக்குள் ஓடி சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு பிறகு அது தனது வழித்தடத்தை தேடி செல்ல ஆரம்பித்தது அதனை வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து யானையை வன பகுதிக்குள் பத்திரமாக பல போராட்டங்களுக்கு பிறகு வனப்பகுதிக்குள் சென்றது.