திமுக அரசு பதவி ஏற்ற நாளிலிருந்து சட்டம் ஒழுங்கு சீர்கேடு அமைந்துள்ளதாகவும் போதைப் பொருட்களின் தலைநகரமாக தமிழ்நாடு மாறி வருவதை உடனடியாக தடுக்க வலியுறுத்தி அதிமுக தலைமையில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மனித சங்கிலி போராட்டம் நடத்த தலைமை உத்தரவிட்டிருந்தது.

அதன் ஒரு பகுதியாக கோபிசெட்டிபாளையம் பகுதியில் போதை பொருட்களின் புழக்கத்தை தடுக்க வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

கோபி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பிருந்து புதுப்பாளையம் கோபி பேருந்து நிலையம் சிக்னல், மார்க்கெட், கச்சேரிமேடு, வரை சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த மனித சங்கிலி போராட்டம் ஆனது நடைபெற்றது,அதனைத் தொடர்ந்து கோபி பேருந்து நிலையத்தில் முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் தலைமையில் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் கே எ செங்கோட்டையன்,அதிமுக ஆட்சியில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறவில்லை எனவும், அதிமுக ஆட்சியில் மக்கள் பாராட்டு என்ற அளவிற்கு கள்ளச்சாராயம் போதை பொருட்கள் இல்லை எனவும்,தமிழகத்தில் போதை பொருட்கள் அதிகரித்து காணப்படுகிறது என்பதை எடுத்துக்காட்டுகின்ற விதமாக மனித சங்கிலி போராட்டம் ஆனது நடைபெற்றுக் கொண்டுள்ளது,திமுக இதனை உடனடியாக நிறுத்த வேண்டும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுகின்ற வகையில் இந்த போராட்டம் ஆனது தற்போது நடைபெற்றுக் கொண்டுள்ளது என்றார்.