கோபி அருகே உள்ள பங்களாபுதூர் உப்பு பள்ளத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (60). ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர். இவர் அதே பகுதியில் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.
நேற்று மதியம் இவரது விவசாய தோட்டத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர்.


அப்போது அங்கு சுமார் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று வருவது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்த டி.என்.பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மலைப்பாம்பை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்களால் பாம்பை பிடிக்க முடியாத நிலையில் கோபி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்து அங்கு சென்ற கோபி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ்குமார் தலைமையில் முன்னனி தீயணைப்பு வீரர்கள் மாதப்பன், திருமலைசாமி, ராமச்சந்திர மூர்த்தி, தீயணைப்பு வீரர்கள் சிசில், பூபதி, சங்கீத் ஆகியோர் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து டி.என்.பாளையம் வன பகுதியில் விட்டனர்.விவசாய நிலத்தில் மலைப்பாம்பு வந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.