மேற்கு வங்கத்தில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் கோபிசெட்டிபாளையம் கிளை சார்பில் 100 க்கும் மேற்ட்ட மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கொல்கத்தாவில், ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி பெண் பயிற்சி மருத்துவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய காவல்துறை, மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது, இந்த நிலையில் கொல்கத்தா சம்பவத்தை கண்டித்து இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்தம் நடத்தப்போவதாக மருத்துவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
அந்த வகையில் இன்று கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கரட்டடிபாளையம் பகுதியில் இந்திய மருத்துவ சங்க அலுவலகத்தில், பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன்
சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பெண் மருத்துவர்கள் பாதுகாப்பு வழங்க கோரியும், பெண் பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கையில் பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.