கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டியில் எங்களையும் ஒன்றிய திமுக சார்பின் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.இந்த போட்டியை ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என் நல்லசிவம் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.போட்டியை மாவட்டச் செயலாளர் நல்லசிவம் கொடியேசித்து தொடங்கி வைத்ததும், போட்டியில் கலந்து கொண்ட ரேட்டில் வண்டிகள் சீறிப்பாய்ந்தன.அப்போது எதிர்பாராத விதமாக போட்டியில் கலந்து கொண்ட ஒரு ரேக்ளா வண்டி சாலையோரம் நின்று கொண்டிருந்த திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன் மீது மோதியது.இதில் தூக்கி வீசப்பட்ட சிந்து ரவிச்சந்திரன் காயமடைந்து மயங்கி விழுந்தார்.உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ரேக்ளா பந்தயத்தில் ரேக்ளா வண்டி மோதி திமுக பொறுப்பாளர் காயமடைந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுகிறது.