பச்சைமலை முருகன் கோவிலில் தமிழக வெற்றி கழகத்தினர் சிறப்பு வழிபாடு
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தலைமையில் வருகின்ற 27-ந்தேதி
விழுப்புரம் அருகே உள்ள விக்ரவாண்டியில் கட்சியின் முதல் மாநாடு நடக்கிறது.
இதனை முன்னிட்டு மாநாடு மாபெரும் வெற்றி பெற வேண்டி கோபி நகர இளைஞரணி சார்பில் பச்சமலை பாலமுருகன் கோவில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகர இளைஞரணி தலைவர் நித்தின் தலைமை தாங்கினார்.
கோபி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் எம். ஆனந்தகுமார் சிறப்பான அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதையொட்டி கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில் நகர நிர்வாகிகள் ஜம்பு கார்த்தி, பிரசன்னா, கமல்,செந்தில்குமார் நகர இளைஞரணி நிர்வாகிகள் ஹரி, லோகநாதன், நவீன்,தீபக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.