மக்கள் மகிழ்ச்சியோடு செல்வதற்கு தெருநாய்கள் மூலமாக ஏற்படுகிற இடர்பாடுகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு கோபி பகுதியில் தெரு நாய்களுக்கான நவீன கருத்தடை மையம் துவங்கப்பட்டுள்ளது, கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.


கோபிசெட்டிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு கால்நடை மருத்துவமனையில் தெரு நாய்களுக்கான நவீன கருத்தடை மையம் அமைப்பதற்க்கான பூமி பூஜையினை முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் துவக்கிவைத்தார்.


கோபிசெட்டிபாளையம் நகர பகுதியில் செயல்பட்டு வரும் அரசு கால்நடை மருத்துவமனையில் 24 மணி நேரமும் ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகள் மற்றும் பறவையினங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் கோபி நகர பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களால் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு பெரும் அச்சுருத்தல் ஏற்படுவதால் தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பொதுமக்கள் சார்பில் அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் மூலம் சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையனிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.இதனையடுத்து தனியார் நிறுவனத்தின் பங்களிப்பு 10 லட்சத்தில் நவீன கருத்தடை மையம் கோபி கால்நடை மருத்துவமனையில் அமைக்கும் நடவடிக்கைகள் துவங்கப்பட்டது. இதற்க்கான பூமி பூஜையினை முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் துவக்கிவைத்தார்.
பின்னர் கோபி கால்நடை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்கள் குறித்த ஆய்வு செய்த முன்னாள் அமைச்சர் கால்நடைகளுக்கு அளிக்கப்படும் மருத்துவ முறை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பின்போதுகால்நடை பன்முக மருத்துவமனை அதிமுக ஆட்சியில் இரண்டு இடங்களில் மட்டுமே வழங்கப்பட்டது.
அதில் ஒன்று கோபிசெட்டிபாளையம் எனவும், அனைத்து மருத்துவ வசதிகளும் இந்த கால்நடை மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது எனவும், இந்த மருத்துவமனைகளில் இரவு நேரங்களிலும் சிகிச்சை பெற முடியும்,இது எந்த பகுதியிலும் இல்லை எனவும் தெரிவித்தார்மக்கள் மகிழ்ச்சியோடு செல்வதற்கு தெருநாய்கள் மூலமாக ஏற்படுகிற இடர்பாடுகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு கோபி பகுதியில் தெரு நாய்களுக்கான நவீன கருத்தடை மையம் துவங்கப்பட்டிருக்கிறது, தெருநாய்களாள் ஏற்படும் இடர்பாடுகளை தடுப்பதற்கு மூன்று மாதத்திற்க்குள் கோபி பகுதியில்; அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது, என்றார்.