கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு காவல் நிலையத்தில் தமிழக மதுவிலக்கு பிரிவு ஐஜி மயில்வாகனன் ஆய்வு மேற்கொண்டார்.

Tamil Nadu Prohibition Division IG Mayilvaganan conducted the investigation at Kopichettipalayam Prohibition Police Station.

கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மதுவிலக்கு காவல் நிலையத்தில் தமிழக மதுவிலக்கு பிரிவு மயில்வாகனன் ஆய்வு மேற்கொண்டார், காவல் நிலையத்திற்கு ஆய்வுக்கு வந்த மயில்வாகனனுக்கு கோபி மதுவிலக்கு காவல்துறையினர் மலர்கொத்து வழங்கி வரவேற்பளித்தனர்

1714966816888605 1
1714966811248050 2

கோபி மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு சென்ற மதுவிலக்கு பிரிவு ஐஜி மயில்வாகனன் காவல் நிலையத்தில் எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறித்தும் மதுவிலக்கு சம்பந்தமான பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் குறித்து இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களின் விவரங்கள் குறித்து காவல்துறையினரிடம் கேட்டறிந்தார்.

1714966805739376 3

தொடர்ந்து வழக்கு சம்பந்தமான பதிவேடுகளை ஆய்வு செய்தார். பின்னர் கோபி மதுவிலக்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களிடம் அவர்களது குறைகளை கேட்டறிந்த அவர் காவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment