தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் கோபிச்செட்டிப்பாளையம் வட்டக் கிளையின் மாதாந்திர கூட்டம், இன்று (25.09.2024) கோபி சாரதா மேனிலைப் பள்ளியில் வட்டத் தலைவர் திரு.ஜெயந்தன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்வரும் 30.09.2024 அன்று DCS பணி புறக்கணிப்பு – தொடர் போராட்டத்தின் அடுத்த கட்டமாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்வது எனவும் மேலும் பல தீர்மானங்களும் இயற்றப் பட்டன. இக்கூட்டத்தில் வட்ட செயலாளர் சரவணக்குமார், பொருளாளர் சுஜேஷ், துணைத்தலைவர் நடராஜு, ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் கோபிச்செட்டிப்பாளையம் வட்டக் கிளையின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam