ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வட்டாச்சியர் அலுவலகங்களில் கிராம உதவியாளர்களுக்கு கூடுதல் பணிகளை வழங்குவதை வட்ட நிர்வாகம் கைவிட வலியுறுத்து கோபிசெட்டிபாளையம் கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் 50 க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்பட்டத்தில் ஈடுபட்டனர்..


கடந்த 06.09.2024 அன்று வருவாய்த்துறையில் நடைபெற்ற அவசர செயற்குழு முடிவின்படி ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வட்டாச்சியர் அலுவலகங்களில் கிராம உதவியாளர்களை இரவுக்காவல் பணி, ரெக்கார்டு ரூம்பணி, மக்களுடன் முதல்வர் மனுக்களை கணினியில் முடிவு செய்யயவும், டிஜிட்டல் கிராப் சர்வே பணிகளை செய்ய கிராம உதவியாளர்களை கட்டாயபடுத்தி வருவதாகவும், பணிக்கு வராத கிராம உதவியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் மிரட்டி நவீன கொத்தடிமைகளாக நடத்தி வருவதாகவும்,
இந்த செயல் கிராம உதவியாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியும், வேதனையை ஏற்படுத்தி உள்ளதை கண்டித்தும், வரும் காலங்களில் வட்ட நிர்வாகம் உடனடியாக இது போன்ற நடவடிக்கைகளை கை விட வேண்டும் என வலியுறுத்தியும், மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஈரோடு மாவட்ட தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி இதற்கு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோபி கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் 100 க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்பட்டத்தில் ஈடுபட்டனர்.