கோபிசெட்டிபாளையம் அருகே கொங்கு பண்பாட்டு மையத்தின் 8 வது ஒயிலாட்டம் மற்றும் வள்ளி கும்மி அரங்கேற்று விழாவில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு ஒரே சிருடை அனைத்து நடனம் ஆடி அசத்தினார்.


கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குருமந்தூர் காளியம்மன் நகர் பகுதியில் நம்பியூர் கொங்கு பண்பாட்டு மையம் சார்பில் கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்ட கலையை பாரம்பரிய சீருடைகளை அணிந்து சிறுமிகள், பெண்கள் ஆடிய வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.



கும்மியாட்ட ஆசிரியர்கள், வள்ளி கதையுடன் இடையிடையில் நாட்டுப்புற பாடல்களும் பாடியும் பெண்கள் அதற்கு ஏற்றார் போல் நடனமாடியும் காண்போரை உற்சாகப்படுத்தினர்.


இந்த பள்ளி கும்மியாட்டம் அரங்கேற்று விழாவில் கோபி சுற்றுவட்டார பகுதிகளான நம்பியூர் குருமந்தூர், கெட்டிச்செவியூர், எலத்தூர் கோட்டுபுள்ளாம்பாளையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கும்மி ஆட்டத்தை கண்டு களித்தனர்.