நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் பவர் டேபிள் (பனியன் உற்பத்தியாளர்கள்) உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
ஆயிரக்கணக்கான பனியன் கம்பெனி தொழிலாளர்கள் கூலி இழக்கும் அபாயம்


நம்பியூர்,அந்தியூர், புளியம்பட்டி, கெட்டிச்செவியூர், கொளப்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் 2000 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பவர் டேபிள் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்த போராட்டம் பல லட்சம் மதிப்பிலான உற்பத்தி செய்யப்பட்ட பனியன்கள் தேக்கம் அடைந்துள்ளது.
திருப்பூரில் இயங்கும் உள்நாட்டு பனியன் விற்பனைக்கான நிறுவனங்கள் ஜாப் ஒர்க் முறையில் பவர் டேபிள் நிறுவனங்களிடம்
துணியை வழங்கி பனியன் மற்றும் உள்ளாடை ரகங்களை தைத்து பெற்றுக்கொள்கின்றனர்.
இது போன்ற பவர் டேபிள் எனப்படும் பனியன் தையல் தொழில்களுக்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு நிர்ணயம் செய்யப்படுகிறது.
இதன்படி கடந்த ஜூன் மாதம் முதல் நடைமுறை கூலியில் இருந்து 7 சதவீதம் உயர்வு வழங்க வேண்டும்.
ஆனால் 2 மாதங்களாகியும் சில நிறுவனங்கள் கூலி உயர்வு வழங்காமல் இருந்துள்ளது.
இதன் காரணமாக பவர் டேபிள் சங்கம் மகாசபை கூடி கூலி உயர்வை வழங்க வேண்டும் எனவும் இல்லாத பட்சத்தில் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்திருந்தனர்.
இதில் நூல் விலை உயர்வு உதிரி பாகங்களின் விலை உயர்வு மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 7 சதவீத கூலி உயர்வை கேட்டுள்ளோம்
இந்நிலையில் நிறுவனங்களில் இருந்து
அதன் அடிப்படையில் கூலி உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறாததால் நேற்றைய தினம் முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பவர் டேபிள் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக இன்று முதல் பனியன் பவர் டேபிள் உரிமையாளர்கள் சங்கத்தினர் கூலி உயர்வு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து தயார் செய்யப்பட்ட பனியன் துணிகள் டெலிவரி
செய்யப்படாமல் உள்ளது.
ஆர்டர் பெறாமலும், டெலிவரியை நிறுத்தியும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். திருப்பூரிலும் இந்தபோராட்டம் நடந்தது.
கோரிக்கையின்படி 7 சதவீத ஊதிய உயர்வு வழங்க முன் வராத நிலையில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து மீண்டும் ஆலோசனை நடத்தி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.