நம்பியூர் அடுத்துள்ள குருமந்தூர் மற்றும் கரட்டுப்பாளையம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்


நம்பியூர் அடுத்துள்ள குருமந்தூர் ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது


இதில் பொதுமக்கள் புதிய மின் இணைப்பு வீட்டு வரி குடிநீர் வரை பெயர் மாற்றங்கள் வர்த்தக உரிமம் வேண்டி இணைய வழிபட்ட மாறுதல் நில அளவீடு கட்டுமான வரைபட ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் தரப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில், நம்பியூர் வட்டாட்சியர் ஜாகிர் உசேன், குருமந்தூர் விஏஓ பழனிச்சாமி, ஊராட்சித் துறை வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை,சமூக நலத்துறை, வேளாண்மை துறை, காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை பெற்றனர்
மேலும் இந்த நிகழ்ச்சியில் குருமந்தூர் ஊராட்சி மன்ற தலைவர் தேவி சந்திரசேகர்,கரட்டுப்பாளையம் மன்ற தலைவர் ருக்மணி, கரட்டுப்பாளையம் ஊராட்சி துணைத் தலைவர் சோமசுந்தரம்,
கரட்டுப்பாளையம் 2 வார்டு உறுப்பினர் தேன்மொழி பரமேஸ்வரன், குருமந்தூர் 2 வார்டு உறுப்பினர் சசிகலா, 7 வார்டு உறுப்பினர் ராசு அம்மாள்,
குருமந்தூர் கவுன்சிலர் வளர்மதி,
உறுப்பினர் செல்லப்பன்,திமுக பொதுக்குழு உறுப்பினர் பழனிச்சாமி,
கலை இலக்கிய மாவட்ட துணைத் அமைப்பாளர் ரமேஷ் செல்வன், இந்து சமய அறங்காவலர் தலைவர் அண்ணாதுரை,
நடுப்பாளையம் கிளை அவைத் தலைவர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.