கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் வர தடைபவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை முதல் 4 ஆம் தேதி வரை மூன்று நாளைக்கு கொடிவேரி அணை மூடப்படுவதாக நீர்வளத்துறை அறிவிப்புதென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் அதிகப்படியான மழைபெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாலும், பவானிசாகர் அணைக்கு அதிகப்படியான நீர்வரத்து வர வாய்ப்புள்ளது. மேலும், பாசனத்திற்கு பவானிசாகர் அணையிலிருந்து, பவானி ஆற்றில் 1155 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், ஆடிப்பெருக்கு முன்னிட்டு 03.08.2024 மற்றும் 04.08.2024 ஆகிய தினங்களுக்கு கொடிவேரி அணைக்கட்டிற்கு அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருகைப் புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், எந்நேரமும் பவானி ஆற்றில் அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி 02.08.2024, 03.08.2024 மற்றும் 04.08.2024 ஆகிய மூன்று தினங்களுக்கு மட்டும் கொடிவேரி அணைக்கட்டு தற்காலிகமாக மூடப்படுவதாக நீர்வளத் துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் வர தடை பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை முதல் 4 ஆம் தேதி வரை மூன்று நாளைக்கு கொடிவேரி அணை மூடப்படுவதாக நீர்வளத்துறை அறிவிப்பு

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam