கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நாகதேவம்பாளையம் கீழ்பவானி வாய்க்காலில் அமைக்கப்பட்டு வரும் கான்கிரீட் திட்ட பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் 100 க்கும் மேற்பட்டோர் போராட்டம்.ஆகஸ்ட் 15 ஆம் தேதி தண்ணீர் திறப்பதை அரசு உறுதி செய்யவும் விவசாயிகள் வலியுறுத்தல்.

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நாகதேவம்பாளையம் கீழ்பவானி வாய்க்காலில் அமைக்கப்பட்டு வரும் கான்கிரீட் திட்ட பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் 100 க்கும் மேற்பட்டோர் போராட்டம்.ஆகஸ்ட் 15 ஆம் தேதி தண்ணீர் திறப்பதை அரசு உறுதி செய்யவும் விவசாயிகள் வலியுறுத்தல்.

1722497641219112 0
1722497637630733 1

பவானிசாகர் அணையில் இருந்து கரூர் மாவட்டம்  வரை சுமார் 200 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டு உள்ள கீழ்பவானி பாசன வாய்க்கால் மூலமாக  ஆண்டுதோறும் நேரடியாக 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

1722497630883669 2
1722497626462407 3

இது தவிர கசிவு நீர் திட்டங்கள் மூலமாக சுமார் 2 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் மறைமுகமாகவும் பயன்பெற்று வருகிறது.  இந்த நிலையில்  கடந்த அதிமுக ஆட்சியில்  வாய்க்காலின் இரு கரையிலும் பக்கவாட்டு சுவர் மற்றும் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

வாய்க்காலில் கான்கிரீட் சுவர் மற்றும் தளம் அமைத்தால் கசிவு நீர் திட்டங்கள் மூலமாக மறைமுகமாக பாசன வசதி பெற்று வரும் விவசாய நிலங்களும், ஆயிரக்கணக்கான கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் வரன்டு விடும் எனக்கூறி இந்த திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர்

ஆண்டு தோறும் ஆகஸ்ட் 15ம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கமாக உள்ளது, இந்த நிலையில் நாகதேவன் பாளையம் கீழ்பவானி வாய்க்காலில் அமைக்கப்பட்டு வரும் கான்கிரீட் திட்ட பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் 100 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்

கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஆகஸ்ட் 15ம் தேதி உரிய நேரத்தில் தண்ணீர் திறக்க வலியுறுத்தியும், வாய்க்காலில் கான்கிரீட் பக்கவாட்டு சுவர் மற்றும் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நாகதேவன் பாளையம் பகுதியில் விவசாயிகள் வாய்க்காலில் இறங்கி போரட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்