டி என் பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அருகேயுள்ள கணக்கம்பாளையம் ஊராட்சியில் 100 நாள் வேலை வேண்டி சுமார் 200 பேர் சாலை மறியலிலும் அதனை தொடர்ந்து கணக்கம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தையும் முற்றுகை

D N concussion The 100-day job in the infancy town near the next hand and the blockade of about 200 people at road picket and its subsequent computation and town office

டி என் பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அருகேயுள்ள கணக்கம்பாளையம் ஊராட்சியில் 100 நாள் வேலை வேண்டி  சுமார் 200 பேர் சாலை மறியலிலும் அதனை தொடர்ந்து கணக்கம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தையும் முற்றுகை இன்று காலை திடிரென முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

1720283912731209 0
1720283907381399 1

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது;
கணக்கம்பாளையம் ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்டோர் 100 நாள் வேலையில் பணி செய்து வந்தோம், கடந்த சில தினங்களாக வேலை இல்லாததால் எங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

1720283900025281 2

நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை கேட்டு வந்தோம், சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவரிடமும் தொடர்ந்து வேலை கேட்டு வந்தோம்.

ஆனால், கணக்கம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுமார் 25 பேருக்கு மட்டும் நூறு நாள் வேலை கொடுப்பதாக புகார் கூறுகின்றனர்.

மீதியுள்ள எங்களின் வாழ்வாதாரத்திற்கு என்ன் வழி?  அரசும் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகமும் நூறு நாள் வேலை எங்களுக்கும் கிடைக்க சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்