

கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட குப்பாண்டார் வீதி, ரைஸ் மில் ரோடு பகுதி, மணிமேகலை விதி, சிவ சண்முக வீதி, திரு வி காவேரி செங்கோட்டையன் காலனி பெரியார் நகர், முத்து நகர் பஜனை கோயில் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள், சிறு பாலம் அமைத்தல், குடிநீர் குழாய்கள் நீட்டிப்பு செய்தல், உள்ளிட்ட பணிகளுக்காக சுமார் 80 லட்சம் மதிப்பீட்டிலான பணிகளுக்கு பூமி பூஜை செய்து முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.
கோபி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைக்க சென்ற முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையனுக்கு பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர்