நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வலியுறுத்தியும், பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தியும் கோபிசெட்டிபாளையம் அருகே கவுந்தப்பாடியில் உள்ள ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்பு விவசாயிகள் மற்றும் கொ.ம.க.தேசிய கட்சியினர் கையில் கரும்பு,மஞ்சள், கம்பு பயிர்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

InShot 20250729 101902347
InShot 20250729 101821750

விவசாய பயிர் கடன்களுக்கு சிபில் ஸ்கோர் கேட்கும் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தியும், நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வலியுறுத்தியும், பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தியும் கோபிசெட்டிபாளையம் அருகே கவுந்தப்பாடியில் உள்ள ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்பு விவசாயிகள் மற்றும் கொ.ம.க.தேசிய கட்சியினர் கையில் கரும்பு,மஞ்சள், கம்பு பயிர்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் பயிர் கடன் பெறுதல், சரக்கு இருப்பு கடன் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கூட்டுறவு கடன் சங்கங்களில் வழங்கும் கடனுக்கு மற்ற கடன்களை போலவே விவசாயிகளுக்கும் சிபில் ஸ்கோர் முறையை ஒன்றிய அரசு நடைமுறை படுத்தி உள்ளது. இந்த முறையை ரத்து செய்ய வலியுறுத்தியும், நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வலியுறுத்தியும், பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தியும், கரும்புக்கு டன் ஒன்றுக்கு 5,000 ரூபாய் வழங்க வலியுறுத்தியும், தென்னை நல வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கவுந்தப்பாடியில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்பு விவசாயிகள் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் கையில் கரும்பு, மஞ்சள், கம்பு பயிர்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்