

கோபிசெட்டி பாளையம் வாய்க்கால்ரோடு ராமர் எக்ஸ்டென்சனை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி(48). கூலித்தொழிலாளி. இவரும் புதுக்காட்டை சேர்ந்த சீனிவாசன்(55) என்பவரும் வாய்க்கால் ரோட்டில் உள்ள மதுக்கடையில் மது அழைத்துக்கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது இருவருக்கும் இடையே மது வாங்குவதற்கு பணம் கொடுப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டு உள்ளது.இதில் ஆத்திரமடைந்த சீனிவாசன், தாக்கியதில் கிருஷ்ணசாமி படுகாயமடைந்தார்.
அருகில் இருந்தவர்கள் கிருஷ்ணசாமியை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கிருஷ்ணசாமி அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணசாமி உயிரிழந்தார்.
இதுகுறித்து கோபி போலீசார் அடிதடி வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கிருஷ்ணசாமி உயிரிழந்ததால் கொலை வழக்காக பதிவு செய்து சீனிவாசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..