கோபி வைரவிழா துவக்கப் பள்ளியில் நடைபெற்ற இலவச காது, மூக்கு தொண்டை மற்றும் பல் மருத்துவ முகாம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பொது மக்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று கூறி நம்ம கோபி பவுண்டேசனுக்கு நன்றி கூறினார்கள். மேலும் அப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அறம் நேசம் அறக்கட்டளை சார்பில் மாற்று திறன் குழந்தைகள் & பெரியவர்களுக்கும் இலவச செயற்கை கால்,காதுகேட்கும் கருவிகள்,போன்ற பயனுள்ள உபகரணங்கள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் நம்ம கோபி பவுண்டேசன் நிறுவனர் மருத்துவர் அனூப், மருத்துவர் சதீஷ் குமார், காந்திய அறக்கட்டளை தலைவர் வழக்குரைஞர் ஜெகதீஸ்வரன், நம்ம கோபி பவுண்டேசன் தலைவர் குணசேகரன், கோபி ரோட்டரி கிளப் செயளாலர் கார்த்திகேயன், இயன்முறை மருத்துவர் சுதாகர், தாய் அறக்கட்டளை செயலாளர் சுப்ரமணியன் அறம் நேசம் அறக்கட்டளை தலைவர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..