

இஸ்லாமியர்களின் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது, முஸ்லிம்கள் இந்த புனித மாதத்தில் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை பிரார்த்தனை செய்யவும், நோன்பு நோற்கவும் நேரம் ஒதுக்குகிறார்கள்,உலகம் முழுக்க ரமலான் நோன்பு இன்று தொடங்கியதை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்று வருகிறது, இஸ்லாமியர்கள் இந்த மாதம் முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபடுவார்கள். மேலும் இந்த புனித மாதத்தில் முஸ்லிம்கள் தர்மம் எனும் ஜகாத்தில் ஈடுபடுவார்கள்.ஒரு மாத கால நோன்பு முடிவில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். 30 நாட்களும் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையும், மாலை நேரங்களில் நோன்பு கஞ்சி வழங்கப்படும். 30ம் நாளின் முடிவில் ரமலான் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடுவார்கள்.இந்த நிலையில் இந்த மாதம் இறுதியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் கோபிசெட்டிபாளையம் ஈதுகா பள்ளி வாசலில் வாசலில் முதல் நாள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது,இந்த நிகழ்ச்சியில் கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி தொழுகை செய்து நோன்பு திறந்தனர்,