கோபி காவல் நிலைய எல்லைப் பகுதியில் 17 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோபி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியின் தாயாரிடம் நட்புடன் பழகி வந்த கோபி மேட்டுவளவு பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் மகன் விஸ்வநாதன்(31) என்பவர் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமி கர்ப்பிணியாகவே, இது குறித்து தகவல் அறிந்த அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த கோபி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பிணியாக்கிய விஸ்வநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து கோபியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட விஸ்வநாதன் சிறையில் அடைக்கப்பட்டார்.
கோபி காவல் நிலைய எல்லைப் பகுதியில் 17 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam