ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலானோர் விவசாயம் சார்ந்த தொழில்களை செய்து வருகின்றனர், அந்த வகையில் விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாகவும், விவசாயம் செய்வதன் மூலம் அதிக மகசூல் பெறுவதன் அவசியம் குறித்தும் விவசாயிகளிடம் வேளாண்மை துறை மற்றும் வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்

அந்த வகையில் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் காட்டுப்பாளையம் பகுதியில் டி.என் பாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் அப்பகுதி விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதன் அவசியம் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டதுமேலும் இந்த ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதால் மருந்து கலவை நீர்துளிகள் பயிர்களில் இலைகளின் மீது நேரடியாக பாய்வதால் சராசரியை விட அதிக விளைச்சல் கிடைக்கும் என்றும் இதன் மூலம் கரும்பு குச்சி கிழங்கு விளையும் இடங்களில் ட்ரோன் மூலம் விரைவில் மருந்து தெளிக்கலாம் எனவும், ஒரு நாளைக்கு 30 முதல் 40 ஏக்கர் வரை டிரோன் மூலம் தெளிக்கலாம் எனவும், 10 முதல் 15 நிமிடங்களில் ஒரு ஏக்கருக்கு மருந்து தெளிக்கலாம் என்பது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது,இந்த செயல்முறை விளக்க கூட்டத்தில் நம்பியூர் வேளாண்மை உதவி இயக்குனர் ஜீவா தயாளன் மற்றும் வேளாண் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.