பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர் கன மழை காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டயது. அதைத்தொடர்ந்து அணைக்கு வரும் உபரி நீர் முழுமையாக பவானி ஆற்றில் வெளியேற்றப்படுவதால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
இன்று காலை முதலே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடிவேரி அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்திருந்த நிலையில் பவானிசாகர் அணையில் திறந்து விடப்பட்ட உபரி நீர் கொடிவேரி அணை வழியாக கரைபுரண்டு ஓடுவதால் கொடிவேரி அணையின் இருபுறமும் பாதுகாப்பு பணியில் உள்ள நீர்வளத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சுற்றுலா பயணிகள் அணைக்கு வருவதை தடுத்து வருகின்றனர்.
அதே போன்று பெரியகொடிவேரி, மேவானி, புளியம்பட்டி உள்ளிட்ட பவானி ஆற்றின் கரையோர கிராமங்களிலும் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
27.07.2025 ERD GBC KODIVERY FLOOD WARNING
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் வெள்ள நீர்கரை புரண்டு அணையை மூழ்கடித்து ஓடுவதால் கரையோர கிராம மக்களுக்கு நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam