மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்து ஒன்றிய பா.ஜ.க அரசு நிறைவேற்றியுள்ளது. இதனை எதிர்த்து இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை அறிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வக்பு சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது
அதன் ஒரு பகுதியாக கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் பிரதீப் குமார் தலைமையில் வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தமிழக வெற்றி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam