நம்பியூர் அருகே மலைப்பாளையத்தில் நண்பர்களுடன் குளத்தில் மீன் பிடிக்க வந்த சிறுவன் குட்டையில் மூழ்கி உயிரிழப்பு

A boy who had come to fish in a pond with his friends in Malaipalayam near Nambiyur drowned and died.

நம்பியூர் அடுத்த அப்பியாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (43) பனியன் கம்பெனி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
இவரது மகன் ரோகித் (13) அப்பியாபாளையம் அரசு பள்ளியில் 7 வகுப்பு படித்து வருகிறார்.
இன்று பள்ளி விடுமுறை என்பதால் அதே பகுதியைச் சேர்ந்த சசிகுமார், ரித்தீஷ், ஹரிஹரசுதன், ஆகிய நண்பர்களுடன் ரோகித் மலையப்பாளையம் அருகில் உள்ள முருகன் கோவில் பகுதியில் உள்ள தாமரை குளத்தில் குளித்துவிட்டு மீன் பிடித்து வந்துள்ளனர்.
இதில் ரோஹித், சசிகுமார்,ரித்திஷ், ஹரிஹரசுதன், 4 பேருக்கும் நீச்சல் தெரியாது இந்த குளத்தில் நீண்ட நாட்களாக தண்ணீர் தேங்கி நிற்பதால் சுற்றிவர தாமரை செடிகள் பாசி பிடித்து உள்ளது திடீரென கால் தவறி ரோஹித் நீரில் மூழ்கியுள்ளார்.
செய்வது அறியாத திகைத்து நின்ற மூவரும் கூச்சலிட்டனர்.
அருகில் ஆடு மேய்து கொண்டிருந்த பெண் ஒருவர் தான் கொண்டு வந்த துண்டை தூக்கி வீசி உள்ளார் அதை பிடித்த சசிகுமார், ரித்திஷ், ஹரிஹரசுதன் ஆகிய மூன்று பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அதற்குள் நீரில் மூழ்கிய ரோகித் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
இதுகுறித்து நம்பியூர் தீயணைப்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் உடலை பத்திரமாக மீட்டனர்
பள்ளி சிறுவன் விடுமுறை நாளில் 15 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து பேருந்து ஏறி வந்து நண்பர்களுடன் குளிக்க வந்து உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment