கோபிசெட்டிபாளையம் அருகே நஞ்சைபுளியம்பட்டி பவானி ஆற்றிலிருந்து கடந்த ஆண்டு மீட்கப்பட்ட 14 சாமி சிலைகள் பழங்கால சிலைகள் இல்லை என உறுதியானதை தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.


கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நஞ்சை புளியம்பட்டி பவானி ஆற்றில் கடந்த 2023 செப்டம்பர் மாதம் பழமையான சாமி சிலைகள் கிடப்பதாக தொல்லியல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.தொல்லியல் துறையினர் உத்தரவின் பேரில் கோபிசெட்டிபாளையம் வருவாய் துறை அதிகாரிகள் பவானி ஆற்றில் கிடந்த அம்மன் சிலை, கருப்பராயன் சிலை, நவகிரகங்கள், போர் வீரர்கள் சிலைகள் உள்ளிட்ட 14 கற்சிலைகளை கைப்பற்றி ஆய்விற்காக ஈரோடு தொல்லியல் துறையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தொல்லியல் துறையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட சிலைகள் அனைத்தும் பழங்கால சிலைகள் இல்லை என உறுதியானது, அதனை தொடர்ந்து 14 கற்சிலைகள் கோபி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.மேலும் கடந்த ஆண்டு பவானி ஆற்றில் மீட்கப்பட்ட சிலைகள் அனைத்தும் பல்வேறு காரணங்களுக்காக பொதுமக்கள் ஆற்றில் விடப்பட்ட தற்காலிக சிலைகள் என ஆய்வில் தெரியவந்துள்ளது