கோபி அருகே உள்ள அக்கரை கொடிவேரி காமராஜபுரத்தில் இளம்பெண்ணிடம் செல்போனில் பாலியல் தொந்தரவு கொடுத்த கட்டிட மேஸ்திரி மீது கடத்தூர் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
கோபி அருகே உள்ள அக்கரை கொடிவேரி காமராஜபுரத்தை சேர்ந்தவர் பண்ணாரி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனியார் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அவருடன் கோபி ல.கள்ளிப்பட்டி பிரிவு அருகே வசித்து வரும் தாசப்பன் மகன் ஆறுமுகம்(55) என்பவரும் வேலை செய்து வந்துள்ளார்.
டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் மூடப்பட்ட பிறகு பண்ணாரி கூலி வேலைக்கும், ஆறுமுகம் கட்டிட மேஸ்திரியாகவும் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பண்ணாரி புதிய வீடு கட்ட முடிவு செய்த போது, ஆறுமுகம் வீட்டை கட்டி தருவதாக கூறி உள்ளார்.
அதைத்தொடர்ந்து பணத்தை பெற்றுக்கொண்ட ஆறுமுகம் உரிய காலத்தில் வீடு கட்டுமான பணியை முடிக்காமல் கால தாமதம் செய்து வந்துள்ளார். இதுகுறித்து பண்ணாரியும், அவரது மனைவியும் ஆறுமுகத்திடம் கேட்டுள்ளனர். ஆனாலும் கட்டுமான பணியை முடிக்காமல் இருந்த ஆறுமுகம், அடிக்கடி பண்ணாரியின் மனைவியை தொடர்பு கொண்டு இரட்டை அர்த்த வசனத்தில் பேசியும், செல்போனில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று அங்கு வந்த ஆறுமுகத்திடம், வீடு கட்டுமான பணியை முடிப்பது குறித்து பண்ணாரியின் மனைவி கேட்கவே, ஆத்திரமடைந்த ஆறுமுகம், அவரை தகாத வார்த்தையில் திட்டியும், குடும்பத்துடன் எரித்து கொலை செய்து விடுவதாக மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பண்ணாரியின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் கடத்தூர் போலீசார் ஆறுமுகத்தின் மீது தகாத வார்த்தையால் பேசுதல்(294-பி), கொலை மிரட்டல் விடுத்தல்(506-2), பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மேலும் இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும், கட்டிட மேஸ்திரியை கைது செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட பெண் கோபி டி.எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளித்தார்
அதைத்தொடர்ந்து தனக்கு நேர்ந்த கொடுமை யாருக்கும் நேரக்கூடாது என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
கோபி அருகே உள்ள அக்கரை கொடிவேரி காமராஜபுரத்தில் இளம்பெண்ணிடம் செல்போனில் பாலியல் தொந்தரவு கொடுத்த கட்டிட மேஸ்திரி

தங்க விலை 🟡 – ₹58000/ சவரன்
வெள்ளி விலை⚪ – ₹9100/100g
Source
Thangamayil Jewellers
Katcheri medu, Gobichettipalayam