ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 வாரங்களுக்கு மேலாக மதியம் வேளையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது, இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர்

இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மதியம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது, தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் கவுந்தபாடி,கரட்டடிபாளையம், மொடச்சூர், குள்ளம்பாளையம், கங்கம்பாளையம் ,பொலவக்காளிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது,


இந்த மழையின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து குளிர்ந்த சூழல் நிலவி வருவதுடன், சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது, மேலும் வாகன ஓட்டிகள் மழையில் முகப்பு விளக்குகளை எரியவிட்ட வாறு பயணம் மேற்கொண்டனர். கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
