ஈரோடு மாவட்டம்,கோபி அருகே உள்ள நல்ல கவுண்டம்பாளையம் பிரசித்தி பெற்ற கொங்கு பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை


முன்னிட்டு விரதம் இருந்து அக்கினி கும்பம், பால்குடம் எடுக்கும் பக்தர்களுக்கு நல்லகவுண்டம்பாளையம் மஸ்ஜிதே தக்வா சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் பத்ரு சஹாபாக்கள் நற்பணி மன்றம் இஸ்லாமிய பொதுமக்கள் (மத நல்லிணக்கம்)சார்பில் முத்தவல்லி சேக் இஸ்மாயில், அக்பர் அலி, ஷாகுல் அமீது, ஆசிக் அலி,

லக்கம்பட்டி பேரூராட்சி தலைவர் அன்னக்கொடி, அதிமுக மேற்கு மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் என்.எம்.ரவிச்சந்திரன் ஆகியோர் நீர்மோர், குளிர் பானம், தண்ணீர் பாட்டில் வழங்கினர்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.