கோபி அருகே டி.என்.பாளையம் வனச்சரகம் கொங்கர் பாளையம் காவல் சுற்று வனப்பகுதியை தானியங்கி கேமராவில் பதிவாகியுள்ளது சிறுத்தை கண்டறியப்பட்டுள்ளது.

TN Palayam Vanacharagam Konkar Palayam police circle forest area near Gobi has recorded a leopard detected in the automatic camera

டி.என்.பாளையம் வனச்சரகம் கொங்கர் பாளையம் காவல் சுற்று வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் அவ்வப்போது கால்நடைகளைப் பிடித்துச் சென்ற பிரச்சனைக்குரிய சிறுத்தையை பிடிப்பதற்காக விவசாயிகள்  கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் துணை இயக்குனர் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அவர்களின் அறிவுரைப்படி, டி.என் பாளையம் வனச்சரக அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி சம்பவ இடங்களில் தானியங்கி கேமிராக்கள் கட்டி வைத்து கண்காணித்து வந்த நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை தானியங்கி  கேமராவில் பதிவாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த தரவுகளின் அடிப்படையில் பிரச்சனைக்குரிய சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளது.உத்தரவு கிடைக்கப்பெற்றதும் சிறுத்தையை பிடிப்பதற்கான துரிதநடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்பதை தகவலுக்காக  வனச்சரக அலுவலர் தெரிவித்துக் கொள்கிறார்.

ஆசிரியர், வெளியீட்டாளர்

தங்க விலை 🟡 –   ₹58000/ சவரன்

வெள்ளி விலை⚪ –  ₹9100/100g

Source

Thangamayil Jewellers

Katcheri medu, Gobichettipalayam

Leave the first comment

மற்ற பதிவுகள்