நம்பியூர் கடைவீதிகளில் உள்ள கடைகளில் நேற்று முன் தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். நம்பியூர்-–கோபி ரோடு புத்தக கடை, நம்பியூர்-–திருப்பூர் ரோட்டில் உள்ள அரிசி கடை, நம்பியூர்-–புளியம்பட்டி ரோட்டில் உள்ள பாத்திரக்கடை உள்ளிட்ட 6 மேற்பட்ட கடைகளில் மர்ம நபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் கடைகளில் உள்ள பணத்தை சுமார் ரூ.20 ஆயிரத்திற்கு மேல் எடுத்துச் சென்றுள்ளனர். இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 6 க்கும் மேற்பட்ட கடைகளில் ஒரே நாளில் நடந்த திருட்டு சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நம்பியூர் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை செய்து திருடர்களை கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் சங்கத்தினர் கோரிக்கையும் வைத்துள்ளனர்.