

கோபிசெட்டிபாளையம் கொளப்பலூர் அடுத்த சாணர்பாளையம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட உள்ள மின்மயணத்திர்க்கு கிராம மக்கள் எதிர்ப்பு. கருத்து கேட்டு கூட்டத்தின் போது கொளப்பலூர் பேரூராட்சி தலைவரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு.



கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொளப்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சாணார்பாளையம் – மோளாக்கவுண்டம்பாளையம் இடையில் மின் மயானம் அமைக்க பேரூராட்சி அலுவலகத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து அரசு அதற்கான நிதி 1.46 கோடி ஒதுக்கியுள்ளது,
சாணார்பாளையம் பகுதியில் மின் மயானம் அமைந்தால் மோளகவுண்டன்பாளையம், சாணார்பாளையம், கல்லுமடை, நஞ்சப்பன் காலனி, ஜே ஜே நகர், கல்லுமடை காலனி, உள்ளிட்ட 7 கிராமங்களில் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும், கிணறு ஏரி குளம் குட்டைகள் நீர் நிலைகள் மாசுபடும் எனவும், இந்தப் பகுதிகளை குறுகிய சாலை உள்ளதால் போக்குவரத்திற்கு மிகவும் இடையூறு ஏற்படும் எனவும் இதனால் 4 சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படும் என்பதாலும்,மின் மயானத்தை வேறு இடத்திற்கு மாற்ற 7 கிராம மக்கள் தொடந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.



இந்த நிலையில் இன்று மின் மயானம் குறித்த கருத்துக்கேற்ப கூட்டம் சாணார்பாளையம் பகுதியில் நடைபெற்றது, இந்த கருத்து கேட்டு கூட்டத்தில் 7 ஊர்களைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடையே கருத்துக்களை கேட்டனர்.
தொடர்ந்து கூட்டத்தில் , பொதுமக்கள் மின் மயானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர், கோபி வருவாய் வட்டாட்சியர், பொதுமக்களின் கருத்துக்களை பதிவு செய்து அதனை கோப்புகளாக தயார் செய்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்தார்..
மேலும் இது குறித்த கிராம மக்கள் கூறுகையில், மின் மயானம் அமைக்க பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்படவில்லை எனவும், சம்பந்தப்பட்ட 15 வது வார்டு கவுன்சிலரிடம் இது குறித்து கொளப்பலூர் பேரூராட்சி சார்பில் எந்த தகவலும் வழங்கப்படவில்லை எனவும், மின்மயானம் அமைக்க இருக்கும் வழிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை எனவும் ஆகவே இந்த மின் மயானத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்..
பின்னர் கருத்து கேட்பு கூட்டம் முடிந்த பின்பு வெளியே வந்த கொளப்பலூர் பேரூராட்சி தலைவர் அன்பரசனை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது, உடனடியாக காவல்துறையினர் அவரை மீட்டு அனுப்பி வைத்தனர்.